கோவையில் ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா - அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர்!

கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நிறைவு விழாவில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கோவை மாநகர காவல் துறை ஊர்க்காவல் படையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டது. அதில் 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் தேர்வு பெற்ற நிலையில் அவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் அணிவகுப்பு மேற்கொள்வது, கலவரங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, போராட்ட நேரங்களில் எவ்வாறு செயல்படுவது, பேரிடர் நேரங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



45 நாட்கள் நடைபெற்ற பயிற்சி நிறைவடைந்ததையொட்டி அதன் நிறைவு விழா கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு நிகழ்வை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் இந்நிகழ்வில் அவர் பேசியபோது, ஊர்க்காவல் படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைவருக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த காவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும். ஊர்க்காவல் படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில் கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரின் இசைக்குழுவும் அறிமுகம் செய்யப்பட்டது. ஊர்க்காவல் படை பிரதேச தளபதி தனசேகரன், துணை பிரதேச தளபதி தேன்மொழி ராஜாராம் உட்பட பல்வேறு காவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...