கோவையில் வரும் 26 ஆம் தேதி அறிவொளி இயக்க குடும்ப விழா - அறிவொளி சுடர்கள் நூல் வெளியீடு!

கோவை சித்தாபுதூர் அரசு பள்ளியில் அறிவொளி இயக்க குடும்ப விழா வரும் 26-ம் தேதி நடக்கிறது. 1990 முதல் 97 வரை அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்ட அறிவொளி சுடர்கள் எனும் நூல் வெளியிடப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரும் 26ஆம் தேதி அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த அறிவொளி என்ற இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக கல்வி சேவையை புரிந்து வருகிறது. இந்த நிலையில் சுமார் முப்பது வருடங்களுக்கு பிறகு அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் குடும்ப விழா கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர்கள் மன்ற அரங்கில் நடைபெற்றது. இதில் அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், மோகன் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அவர்கள் வருகின்ற 26ஆம் தேதி சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற உள்ளது. இதில் கடந்த 1990 முதல் 97 வரை அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து புத்தகமாக அறிவொளி சுடர்கள் எனும் நூலை வெளியிடப்பட உள்ளது.

இந்த நூலை ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலாளரும் முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியருமான சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட உள்ளார். மேலும் விழாவில், தற்போதைய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, கிருஷ்ணமூர்த்தி, அப்பாஸ் நாராயணசாமி, பால சண்முகம், உமாவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...