கோவையில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டி - பெண்கள் உட்பட 2,321 பேர் பங்கேற்பு

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்தார். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 10 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


கோவை: தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் 14ஆம் தேதியிலிருந்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.



இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 10 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறும் இப்போட்டியில் 2321 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த தொடக்க விழா நிகழ்வில், கோவை மாவட்ட அத்லட்டிக் தலைவர் ஸ்ரீ பிரியா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...