முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் - கோவையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு, முன்னாள் மேயர் வேலுச்சாமி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.


கோவை: அதிமுகவினர் நிரந்தரப் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஜெயலலிதாவின் உருவச்சிலை மற்றும் புகைப்படங்களுக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணாவின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.



பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கோவை முன்னாள் மேயர் சேம.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...