தாராபுரம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் - ரூ.1.05 கோடிக்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரு கோடியே 5 லட்சத்து 6723 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. 4360 பருத்து மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவைமாவட்டங்களை சேர்ந்த 422 விவசாயிகள், பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ. 8658 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 6900க்கும், சராசரி விலையாக ரூ.7850-க்கும் விற்பனையானது.

விற்பனையான பருத்தியின்மொத்த அளவு 4360 மூட்டைகள், குவிண்டால் அளவு 1373.37. இவற்றின் ரூபாய் மதிப்பு 1,05,06,723/-. இந்த மறைமுக ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கேற்றதாக முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...