குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததில் கோவை முதலிடம் - மாவட்ட எஸ்.பி தகவல்

தமிழ்நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகளவு தண்டனை பெற்றுக் கொடுத்ததில், கோவை முதலிடத்தில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை கஞ்சா சாக்லேட்டுகள் வழக்கமான சாக்லேட்டுக்கள் போலவே இருக்கும், ஆனால் இதில் 15 சதவீதம் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து திருடப்படும் மற்றும் தவறவிடும் செல்போன்களை போலீசார் மீட்டு அவ்வப்போது மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்று சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேசியதாவது:



தமிழ்நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகளவு தண்டனை பெற்றுக் கொடுத்ததில், கோவை முதலிடத்தில் உள்ளது. கஞ்சா சாக்லேட்டுகள் வழக்கமான சாக்லேட்டுக்கள் போலவே இருக்கும், ஆனால் இதில் 15 சதவீதம் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

பவானி ஆற்றில், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. கஞ்சாவை அனைவரும் கடத்துகின்றனர். ஆகையால் இதில் வடமாநிலத்தவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளது எனச் சொல்ல வேண்டாம். கூரியர் மூலம் வடமாநிலங்களிலிருந்து கஞ்சாவை அனுப்புகின்றனர். அதையும் கண்காணித்து வருகிறோம்.

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 1,550 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். NDPS சட்டத்தின் கீழ் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 68பேர் கைதுசெய்யப்பட்டு சுமார் 312.5. கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...