பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் - விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், தற்போது சாட்சிகளிடம் சிபிஐ போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாட்சிகளிடம் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை கும்பல் ஒன்று, வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

அவ்வாறு நடந்த வன்கொடுமையில் கல்லூரி மாணவி ஒருவர், கதறிய ஓலம் இன்றும் நம் காதுகளில் இருந்து ஓய்ந்தபாடில்லை. இந்த வழக்கு பெரும் பூதாகரமாக வெடித்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட திருநாவுக்கரசு, மணிகண்டன், வசந்தகுமார், சபரி, அருளானந்தம் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பின்னாளில் சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை நகலையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படுகின்றது. வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடந்த நிலையில், வழக்கின் சாட்சியங்களை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதாவது கோவையில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், பெண் விசாரணை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொறுத்தவரையில் பெண்கள் சாட்சியங்களாக இருப்பதனால், பெண் அதிகாரி விசாரணையை கையில் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. பரபரப்பு ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது சாட்சியங்களிடம் விசாரணை நடந்து வருவதனால் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...