தீ விபத்தை எப்படி தடுப்பது..? - கோவை அரசு கலை கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு!

கோடை காலம் நெருங்கி வருவதையொட்டி கோவை அரசு கலைக் கல்லூரியில் தெற்கு மண்டல தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்புத் துறையினர் செய்து காட்டி விளக்கமளித்தனர்.



கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.



அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கோவை தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



இதில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சிவராஜ், செல்வ மோகன், முருகையன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செய்து காண்பித்தனர்.



இந்த நிகழ்வில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பயன்படுத்தும் தீ தடுப்பு கருவிகள், தீ அணைப்பான் கருவிகளை உபயோகிக்கும் முறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து செய்து காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



மேலும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி, கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...