கோவையில் வரும் 28-ம் தேதி எக்ஸ்பிரிமெண்டா அறிவியல் மையம் திறப்பு!

கோவையில் ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் ''எக்ஸ்பிரிமெண்டா" என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை வருகின்ற 28ஆம் தேதி துவக்க உள்ளதாக ஜி.டி.நாயுடு அறிவியல் அருங்காட்சியக நிர்வாக அறங்காவலர் ஜி டி கோபால் தெரிவித்துள்ளார். குழந்தைகள், பெரியவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்த மையம் தொடங்கப்பட உள்ளது.



கோவை: கோவையில் ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் ''எக்ஸ்பிரிமெண்டா" என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை வருகின்ற 28ஆம் தேதி துவக்க உள்ளதாக ஜி.டி.நாயுடு அறிவியல் அருங்காட்சியக நிர்வாக அறங்காவலர் ஜி டி கோபால் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஜி.டி.நாயுடு அறிவியல் அருங்காட்சியக நிர்வாக அறங்காவலர் ஜி டி கோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் 1950ஆம் ஆண்டு ஜிடி நாயுடு அறக்கட்டளையை மறைந்த ஜி.டி. நாயுடு ஏற்படுத்தினார். இதன் கீழ் ஜிடி அறிவியல் அருங்காட்சியகம், ஜிடி கார் அருங்காட்சியகம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.



ஜிடி நாயுடு அறக்கட்டளை தற்போது "எக்ஸ்பிரிமெண்டா" என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்த மையத்தின் நோக்கம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, பயிற்சியாகவும், பொழுதுபோக்காகவும், எளிமையாகக் கற்றுக்கொள்ள வைப்பதாகும்.



இந்த அறிவியல் மையம் தொடக்க விழா வருகிற 28ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் ராஜன் தொடங்கி வைக்கிறார். விழாவில் சென்னை, ஜெர்மன் தூதராக அதிகாரி மைக்கேலா குச்லேர், கவுரவ விருந்தினராகப் பங்கேற்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி. கே. கிருஷ்ணராஜ் வானவராவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.



இந்த அறிவியல் மையம் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணையான 120-க்கும் மேற்பட்ட கலந்தாய்வு அறிவியல் பரிசோதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் எளிதாக அணுகி கற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.



சிறந்த அறிவியல் கல்வி அனுபவத்தை தொட்டு, உணர்ந்து கற்கும் வகையில் உள்ளன. இந்த மையத்தில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாத தகவல்கள், அவற்றைக் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் விளக்க அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் உள்ளனர். வேகம்,ஒலி,ஒலி மாயபிம்பம், ஆடிகள், கணிதம், இயற்கை, எந்திரவியல், ஆற்றலும் சக்தியும், ஒளியும் வண்ணங்களும் எனப் பல்வேறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்கள், குழுக்களாக வரும் பார்வையாளர்களுக்கு தேவையான நேரம் ஒதுக்கி விளக்கம் தர வழிகாட்டிகள் உள்ளனர். குழுவாக இணைந்து செயல்முறை விளக்கங்களை நிகழ்த்தவும், குழு பணி மேற்கொள்ளவும், போதுமான நேரமும், உதவியும் அளிக்கிறோம்.



இந்த அறிவியல் மையத்தில் ஸ்டெம் எனப்படும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித பாடங்களுக்கான செயல்முறை ஆய்வகம், இயற்பியல், ரோபோடிக் மற்றும் உருவாக்குபவர்களுக்கான தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தனியார், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், செயல்முறை விளக்கத்தால் அறிவியல் பற்றி அறிவதோடு, தரமான அறிவியல் ஆலோசகர்களும் உதவி வருகின்றனர். இந்த மையத்தை சுற்றிப்பார்த்து, பரிசோதனைகளைச் செய்து பார்க்க மணி நேரம் 3 ஆகலாமெனக் கால அளவு நிர்ணயித்துள்ளோம்.

போதுமான நேரம் இல்லாதவர்கள், மீண்டும் ஒரு முறை வந்து தேவையான தகவல்களையும், விடுபட்ட பணியையும் தொடரலாம். எக்ஸ்பெரிமெண்டா அறிவியல் மையம், முதன்மை கட்டிடத்தில் 2-வது தளத்தில் அமைந்துள்ளது. சரிவு பாதை மற்றும் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பெரிமெண்டா அறிவியல் மையம் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6.30 மணிவரை மையத்தைப் பார்வையிடலாம். திங்கள் கிழமைகள், தேசிய விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த மையம் திறந்திருக்கும். அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும், பிற தனிநபர்களுக்கும் சிறப்புத் தள்ளுபடி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த மையம், இளைய தலைமுறையினருக்கு அறிவியலை கற்றுத் தருவதோடு கோவையின் பொக்கிஷமாகவும் இருக்கும். அதோடு, கோவையில் புதிய அடையாளமாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...