தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றியத்தில் பாஜக கொடியேற்று விழா - முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளாண்பூண்டி பகுதியில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழாவில், பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக் குமார் கொடியேற்றி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளாண்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பா.ஜ.க கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் தலைமை தாங்கினார்.



பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.



அப்போது ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமார் பேசியதாவது, திருப்பூர் தெற்கு மாவட்ட பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அனைத்து கிராமப்புற ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்களின் பணி.

வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி உயர பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். மேலும், மத்திய அரசின் திட்டங்கள் சாதாரண கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டி தீவிர முயற்சி மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் செல்வேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சுமதி. சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணி, பாரி, முருகேசன், ஜெயக்குமார், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...