'வனவிலங்குகளிடமிருந்து எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்..!' - கோவை ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த நல்லூர்வயல், மரக்காட்டுத்தோட்டம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், வனவிலங்குகளிடமிருந்து தங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த நல்லூர் வயல், மரக்காட்டுத்தோட்டம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.



கடந்த இரண்டு மாத காலங்களாக அடிக்கடி யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்படுவதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.



இது தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயி சாமிநாதன் கூறுகையில், எனது நிலத்தில் சுமார் 6 லட்சத்திற்கு வாழை மற்றும் பாக்கு விவசாயம் செய்துள்ளேன். வனவிலங்குகள் விவசாய நிலத்தை சேதப்படுத்திவிட்டது. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்த நிலையில் வனத்துறையினரை தொடர்பு கொண்டு வெறும் 83 ஆயிரம் மட்டுமே இழப்பீடு தொகை வழங்கியுள்ளனர். நான் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பல்வேறு விவசாயிகளின் நிலையும் இதுபோன்றுதான் உள்ளது என்றார்.

காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கான உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதோடு, வனவிலங்குகளிடம் இருந்து தங்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...