கோவையில் வரும் ஏப்ரலில் கொப்பரை கொள்முதல் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை கொள்முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு 108.60க்கும் பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.117.50க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் 01.04.2023 முதல் 30.09.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

தேங்காய் கொப்பரைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தர அளவு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை தொடர்பு கொள்ளலாம்.

விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரையினை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...