ஏற்றமிகு ஏழு திட்டங்களை தொடக்கி வைத்து மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதல்வர்

‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ என்ற தலைப்பில், காலை சிற்றுண்டி திட்டத்தை மேலும் 500 பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவது உள்ளிட்ட 7 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுடன் காலை உணவருந்தினார்.


சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று 'ஏற்றமிகு ஏழு திட்டங்கள்' என்ற தலைப்பில் ஒரே நிகழ்ச்சியில் 7 பெரிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அந்த திட்டங்கள்:

* ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்.

* திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்குதல்.

* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவுபடுத்துதல்.

* பல்வேறு அரசுப்பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல்.

* ரூ.2 ஆயிரம் கோடியில் மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் 44 புதிய மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுதல்.

இதில் காலை உணவு வழங்குவதை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மேலும் 500 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

பொங்கல், கேசரி, ரவா கிச்சடி, சேமியா உப்புமா என பல வகையான உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதால் இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் காலை உணவுத் திட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த திட்டத்தை மேலும் 500 பள்ளிக்கூடங்களுக்கு விரிவாக்கம் செய்ய அடுத்த கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டதால் மேலும் 500 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வந்தாலும் இப்போது 4,308 மருத்துவர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் ரூ.2000 கோடி செலவில் அமைக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகளில் ரூ.1,136 கோடி மதிப்பில் 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமான பணிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கீதாஜீவன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...