கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா - மாநகரில் போக்குவரத்து மாற்றம்!

கோவை மாநகரில் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.



கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகர போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலது புறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டான வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம். மருதமலை சாலை, தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

மருத மலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.

கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப்பணகார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை.

இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், 4 சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்த பயன்படுத்தி கொள்ளலாம்.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவை மாநகரில் 1,000 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவில் திருவிழாவை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோரை கண்டறிய சாதார உடைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...