கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்து ஆலோசனை வழங்கலாம்..! - ஆணையர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தங்களது கருத்தை My City My Budget இணையதளம் மூலம் பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் முன்மொழிவு தொடர்பான பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் அல்லது கருத்துகளை My City My Budget இணையதளம் (https://coimbatoresmartcity.org/mycity-mybudget)மூலம் பதிவு செய்யலாம்.

இந்த முயற்சியின் மூலம் நகரத்திற்கான பல்வேறு தேவைகள், கருத்துக்கள் மற்றும் பொதுக்கண்ணோட்டத்தில் பரிந்துரைகள் பற்றிய விரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வழங்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நிதி மற்றும் திட்டங்களை ஒதுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...