கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டத்தில் கோலாகலம் - பக்தியுடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் இருந்து வடம்பிடித்து இழுத்துவரப்பட்ட கோனியம்மன் கோயில் தேரானது, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் சாலை வழியாக சென்று மீண்டும் ராஜவீதிக்கு வந்தடைந்தது. தேரானது வான் உயர ஜோடிக்கப்பட்டு ஒய்யாரமாக ஊர்வலம் வந்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.


கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கடவுள் கோனியம்மன். டவுன் ஹால் பகுதியில் அமைந்திருக்கின்ற கோனியம்மன் திருக்கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் நடைபெரும் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டம் பிரபலமான தேரோட்டம்.

இந்த தேரோட்டத்தை காண ஆண்டு தோறும் கோயம்புத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து, கோனியம்மன் திருக்கோயில் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபடுவது வழக்கம்.



இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோனியம்மன் திருக்கோவில் சார்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையிலே, இரண்டு மணிக்கு மேல் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.



இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட இந்து பக்தர்கள் பொதுமக்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் பயணித்த பாதைகளில் ஒன்றிணைந்து தேரை பக்தியுடன் வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராஜவீதி தேர்நிலை திடலில் இருந்து வடம்பிடித்து இழுத்துவரப்பட்ட தேரானது, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் சாலை வழியாக, பழமார்க்கெட்டை அடைந்து மீண்டும் ராஜவீதி தேர்நிலை திடலுக்கு வந்தது. பக்தர்கள் தேரின் மீது வேண்டுதல் உப்பு மழை தூவினர்.



கோனியம்மன் திருக்கோயில் பக்தர்கள் டவுன்ஹாலில் உள்ள திருக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோனியம்மன் கோயில் தேர் வான் உயர ஜோடிக்கப்பட்டு ஒய்யாரமாக ஊர்வலம் வந்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை ஏராளமானோர் கண்டு ரசித்து பரவசப்பட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், நான்கு துணை ஆணையர்கள், 11 உதவி ஆணையர்கள், 25 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கோயில் திருவிழாக் கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் கொள்ளையர்களை தடுக்க தனிப்படையும் , மாடியிலிருந்து பைனாகுலர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் தனிக்குழுவும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...