வால்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் அணிவித்தார். நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் மோதிரத்தை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் வழங்கினார்.



மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, புத்தகங்களையும் பரிசாக வழங்கினர்.



பின்னர் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள நகராட்சி தாவரவியல் பூங்காவில் 70 மரக்கன்றுகளை நடவு செய்தனர். அதேபோல் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் செல்வம், நகராட்சி கவுன்சிலர் அன்பரசன், ராஜேஸ்வரி பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...