தேர்தல் ஆணையர் நியமன தொடர்பான வழக்கு - நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.


தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தி சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணையின் போதும், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது.

அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? நான்கு அதிகாரிகளில் அருண் கோயலை தெரிவு செய்தது எப்படி? என்பது போன்ற கேள்விகளை நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்வைத்தது.

தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டதோடு, வழக்கு குறித்த மத்திய அரசு, மனுதாரர்கள் ஐந்து நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்க உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...