கோவையில் கூண்டோடு சிக்கிய சீட்டாட்ட கும்பல் - போத்தனூர் போலீசார் அதிரடி!

கோவை போத்தனூர் விட்டல் நகர் மற்றும் செட்டிப்பாளையம் பிரிவு பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 19 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 சீட்டு கட்டுகள், 58,300 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: ரம்மி உள்ளிட்ட சீட்டு ஆடுவது சட்டப்படி குற்றம் . இவ்வாறு சீட்டு ஆடுவதனால் பலர் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். சீட்டாட்டத்துக்கு அடிமையானவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை அடமானம் வைத்துக் கூட சீட்டு ஆடுகின்றனர். இதனால் அவர்கள் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

இதுபோன்ற, கும்பலை ஒடுக்கும் பொருட்டு போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு, சீட்டாட்ட கும்பல்களை கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை போத்தனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின்பொழுது சீட்டு ஆடியவர்களை கூண்டோடு கைது செய்திருக்கின்றனர்.

கோவை போத்தனூர் விட்டல் நகர் பகுதியில் உள்ள செட் ஒன்றில் சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது, ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், ரவிக்குமார், மணி, கார்த்திக், விஜயகுமார், வெங்கடேசன், சிவக்குமார், முனியப்பன், பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கட்டு சீட்டு மற்றும் 32 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று போத்தனூர் பகுதியில் உள்ள செட்டிபாளையம் பிரிவு பகுதியில் சீட் ஆடிக் கொண்டிருந்த விஜயகுமார், ராஜு, அப்துல் ஹக்கீம், இப்ராஹிம், பாஸ்கர், செல்வம், பரமசிவம், பாண்டி, பைசல் உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போத்தனூர் போலீசார், அவர்களிடமிருந்து இருந்து 5 கட்டு சீட்டு கட்டு மற்றும் 25 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் டிரைவர்கள், கூலி தொழிலாளிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர். இதுபோன்று, தொடர்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...