திருப்பூரில் ரயிலில் அடிப்பட்டு வடமாநில இளைஞர் பலி - கொலை என்று வதந்தி பரவியதால் போலீசார் குவிப்பு!

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டுக் கிடந்த பீகார் மாநில தொழிலாளர் சஞ்சீவ் குமாரின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இது கொலை என்று பரவிய வதந்தியால் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் கூடியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளரைக் கொலை செய்து சடலத்தை வீசி சென்றதாகப் பரவிய வதந்தியால் ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் நேற்றிரவு 1 மணியளவில் தண்டவாளத்தைக் கடக்கும் போது, கேரளாவிலிருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.



இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று காலை சஞ்சீவ் குமாரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாகப் பரவிய வதந்தியின் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்தனர்.



மேலும் சஞ்சீவ் குமாரின் செல்போன் மற்றும் வாகனங்கள் காணவில்லை எனவும், எனவே அவர் கொலை செய்யப்பட்டு அவரின் உடைமைகள் திருடப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். காவல்துறை சார்பில் உரிய விசாரணை நடக்கப்படும் எனத் தொடர்ந்து உறுதி அளித்தனர். இருப்பினும் கலைந்து செல்லாமல் ரயில் நிலையத்தில் சஞ்சீவ் குமார் வந்து சென்றதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

காவல் துறை சார்பில், நள்ளிரவு 12.56 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலை இயக்கி வந்த கருப்பசாமி என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சஞ்சய் குமார் சடலமாக இருந்ததாகவும், ரயிலை அவர் கடக்க முயற்சித்த போது ரயில் மோதி உயிரிழந்ததாகவும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

இருப்பினும் கடந்த சில நாட்களாகப் பல பகுதிகளில் வடமாநிலத்தவர்களைத் தாக்குவதாகப் பரப்பப்படும் வீடியோக்களின் காரணமாக தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களுடைய அச்ச உணர்வு ஏற்பட்டதன் காரணமாகத் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...