அன்னூர் அருகே குட்டைக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞர் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் அன்னூர்- ஒதிமலை ரோட்டில் உள்ள தண்ணீர் இல்லாத குட்டையில் அழுகிய நிலையில் கிடந்த 30 வயது மதிக்க தக்க இளைஞரின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


கோவை: அன்னூர் அருகே குட்டைக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞர் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர்- ஒதிமலை ரோட்டில் தண்ணீர் இல்லாத குட்டை உள்ளது. இந்த குட்டைக்குள் 30 வயது மதிக்கத் தக்க இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை ஆய்வு செய்தனர்.

அப்போது அவர் இறந்த 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால், உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அன்னூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இளைஞர் மது போதையில் குட்டைக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது. போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த இளைஞர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...