கோவை ஆர்.எஸ் புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்! - வாகன ஓட்டிகள் அவதி

காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை வழியாக தான் செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


கோவை: ஆர்.எஸ் புரம் டிபி ரோட்டில் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இந்த சாலை வழியாகத் தான் செல்கிறது.

இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாகப் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு வருகின்றனர்.

இதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த சாலையின் வலது புறமும், இடது புறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

இந்த சாலையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கச் செல்கிறார்கள். அவர்கள் வரும் வரை அந்த கார் அங்கேயே நிற்கும்.

இதனால் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் ஒரு புறத்தில் மட்டும் தான் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும் எனப் போக்குவரத்து போலீசார் கூறினர். விதிமுறை விதித்துள்ளனர். அனைவருமே அதனை கடைபிடித்து வந்தனர். ஒரு மாதம் வலது புறமும், மற்றொரு மாதம் இடது புறமும் நிறுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி வந்தனர். ஆனால் தற்போது போலீசார் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் பகுதிக்கு 4 சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையின் இரு புறங்களிலும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முன்பு போலீசார் வந்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

ஆனால் தற்போது கண்டுகொள்வதில்லை. இதனால் அனைத்து வாகன உரிமையாளர்களும் அவர்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை விட்டு செல்கிறார்கள். எனவே வாகனங்களை வரைமுறைப்படுத்தி நிறுத்தினால் மட்டுமே இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...