கோவை வேளாண் பல்கலையில் வேளாண் தொழில் முனைவோருக்கான 2 நாள் பயிற்சி!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சியில் தர்மபுரியை சேர்ந்த 21 தொழில்முனைவோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 மற்றும் 3ஆம் தேதிகளில் வேளாண் தொழில்முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வணிகத்துறை சார்பில், தொழில்‌ முனைவோருக்கு வேளாண்‌ தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்‌ நுட்பவணிக காப்பகம்‌, வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் கடந்த மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சி நடைபெற்றது.



இதில் வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குநர்‌, முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌,‌ பயிற்சியை துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகளை குறித்து விரிவுரை வழங்கினார்‌.



தொழில்‌ நுட்பவணிக காப்பக தலைமை செயல்‌ அதிகாரி ஞானசம்பந்தம்‌, வரவேற்புரையாற்றினார்‌. விவசாய மற்றும்‌ கிராமப்புற மேலாண்மை இணைப்‌ பேராசிரியர் மலர்கொடி நன்றியுரை ஆற்றினார்‌.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வேளாண்‌ மற்றும்‌ வேளாண்‌ சார்ந்த துறைகளிலிருந்து 21 தொழில்‌ முனைவோர்கள்‌ இப்பயிற்சியில்‌ பங்கு பெற்றனர்‌.

வணிகத்திட்டம்‌ தயாரித்தல்‌, வணிகத்திற்கான செலவு பகுப்பாய்வு, முதலீட்டுத்திட்டம்‌, தொழில்‌ நுட்பவணிக காப்பகத்தின்‌ செயல்பாடுகள்‌, வணிகம்‌ சார்ந்த சேவைகள்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ மதிப்பு கூட்டல்‌ போன்ற தலைப்புகளை மையமாகக்‌ கொண்டு இப்பயிற்சியானது நடைபெற்றது.

தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ தங்களின்‌ தொழில்‌ முனைவோர்‌ பயணத்தை பயிற்சியாளர்களிடம்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

இப்பயிற்சிக்குபின்‌ இறுதியில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலான கடனுதவியும்‌ ரூ.2.00 லட்சம்‌ வரையிலான மானியமும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌.

மேலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ இவ்வகை பயிற்சியானது தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌ தொழில்நுட்ப உதவியுடன்‌ தமிழ்நாடு முழுவதும்‌ நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...