TVH விஸ்டா ஹைட்ஸ் 7 வது சிக்னேச்சர் டவர் அறிமுக விழா - பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது

கோவையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான TVH விஸ்டா ஹைட்ஸ் தனது 7 வது சிக்னேச்சர் டவரின் திறப்பு விழா, நேற்றும் இன்று நீயா நானா கோபிநாத், ஆல்யா - சஞ்சீவ் ஜோடி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.


கோவை: பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான TVH விஸ்டா ஹைட்ஸ் தனது 7 வது சிக்னேச்சர் டவரை அறிமுகப்படுத்தியது.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான TVH தனது நம்பகத்தன்மை, எண்ணற்ற வசதிகள், பல மாறுபட்ட அம்சங்கள், பணத்திற்கான உரிய மதிப்புமிக்க இடம் உள்ளிடவற்றிற்காக மிகவும் பாராட்டப்பட்ட விஸ்டா ஹைட்ஸ் திட்டம் மூலம் கோவையில் ஆடம்பர வாழ்க்கையின் அர்த்தத்தை மாற்ற தயாராக உள்ளது.



டிவிஎச்-ன் இந்த புதிய திட்டமானது, 12.5 ஏக்கர் நிலப்பரப்பில், 800+ வீடுகளுடன் 12 சின்னச் சின்ன டவர்களில் பரந்து விரிந்துள்ள TVH குழுமம், கோயம்புத்தூர் நகரின் முதன்மையான இடத்தில் சிறப்பு மிக்க அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய பிரீமியம் வில்லாக்களை வழங்குகிறது.



TVH Vista Heights-ல் டவர் 7-ன் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, நேற்றும் இன்றும், பெரு வங்கிகள், மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு பிடித்தமான பிராண்டுகளுடன் " The Great Housing Festival" என்ற ஹவுசிங் மேளா நடத்தப்பட்டு வருகிறது. இந்த துறை சார்ந்த தொழில் வல்லுனர்கள், பலதரப்பட்டு உணவு கடைகள், பிரபலங்கள், நாள் முழுவதும் பொழுதுபோக்கு கொண்டாட்டம் மற்றும் பல நிகழ்வுகள் இதில் நடைபெறவுள்ளன.

இந்த இரண்டு நாள் நிகழ்வு, இந்த புதிய எஸ்டேட் திட்டமானTVH Vista Heights இல், மக்கள் தங்கள் கனவு இல்லத்தைப் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து முடிவெடுக்க உதவுவதற்காக ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளது. HDFC, ICICI, Bank of Baroda மற்றும் Indian Overseas Bank போன்ற வங்கிகளால் முன்வைக்கப்படும் சலுகைகளின் வரிசையுடன், இந்த வகையான வீட்டுவசதி மேளா நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கோபிநாத்தின் அறிவுப்பூர்வமான பேச்சு நிகழ்ச்சி மற்றும் பிரவீன் குமாரின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மேலும், பல்துறை இசை வித்தகரான ஐஸ்வர்யா சுரேஷ் இசை நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நட்சத்திர ஜோடியான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...