வீடியோக்கள் போலியானது என்று வடமாநில தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர்..! - பீகார் மாநில ஆய்வு குழு தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், இணையத்தில் வைரலான வீடியோக்கள், தமிழகத்தில் நடந்தது அல்ல என்பதை வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.



கோவை: வடமாநில இளைஞர் தாக்கப்படுவதாக பரவிய வீடியோ தமிழகத்தில் நடந்தது இல்லை என்ற உண்மையை வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வடமாநிலத்தவர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பீகார் மாநில அரசின் குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தொழில்துறையினருடன் ஆய்வு கூட்டம் நடத்தியது.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் பேசியதாவது,





இன்று காலையில் இருந்து கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பீகார் மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினோம்.

முக்கியமாகசமூக வலைத்தளங்களில் வெளியான சில வீடியோக்கள், அதன் மூலம் பொய்யான தகவல்களும் பரப்பப்பட்டது. அந்த வீடியோ மற்றும் தகவல்களை பார்த்து வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சம் இருந்தது. அந்த தகவல் பொய்யானது என தொழிலாளர்களிடத்தில் எடுத்துக் கூறினோம்.



தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தொழில் துறையினருடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது கருத்துக்களையும் பெற்றுள்ளோம். அந்த வீடியோக்களால் தொழிலாளர்கள் இடையே சிறிது அச்சம் இருந்தது.

மாவட்ட நிர்வாகமும் காவல்துறை நிர்வாகமும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். இதன் மூலம் அந்த தகவல்கள் பீகார் தொழிலாளர்களுக்கு நடந்த சம்பவம் இல்லை என இங்குள்ள தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...