முதல்வர் 70வது பிறந்தநாள் விழா - கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கிய திமுகவினர்!

கோவை குருடம்பாளையம் 12வது வார்டு திமுக சார்பில் பழனி கவுண்டன்பதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாணவ - மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை பழனி கவுண்டன்பதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளை திமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 12வது வார்டு திமுக கிளைக் கழகம் சார்பாக கோவை துடியலூர் அடுத்த பழனி கவுண்டம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருட்கள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றிய குழு உறுப்பினர் ஆறுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணகுமார், குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.



மேலும் பள்ளி நூலகத்துக்கு தேவையான புத்தகங்களை ஆசிரியர்களிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் 12 வது வார்டு அவைத் தலைவர் முருகேஷ், செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சாமுவேல், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மருதாசலமூர்த்தி, மாணவர் அணி ஞானசேகர், கிளைக் கழக நிர்வாகி சிவகாமி, பானு, பொன்னுசாமி, நிர்வாக பொறுப்பாளர்கள் சக்திவேல், ரமேஷ்பாபு, அஸ்கர் அலி, தினேஷ், சாமுவேல், அஸ்வின், கார்த்தி, கிருஷ்ணசுதா, நாககுமார், மாவட்ட ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகசாகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...