ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை உதகை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 5 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை உதகைக்கு வருகை தருகிறார். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


நீலகிரி: 5 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகைக்கு வரவுள்ளதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதி உதகைக்கு வந்தார். அப்போது அவர் முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தநிலையில் அவர் மீண்டும் 5 நாள் பயணமாக நாளை (7-ந் தேதி) ஊட்டி வருகிறார். இதற்காக சென்னையில் விமானம் மூலம் கோவை வருகிறார்.

அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். உதகைக்கு அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.

ஆளுநர் ரவி வருகிற 12-ந் தேதி வரை இங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பிறகே அவர் சென்னை திரும்ப உள்ளார்.

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உதகையில் தங்கியிருக்கும் அவர் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரள பகுதியான வயநாடு மாவட்டத்துக்கும், செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநர் வருகையை முன்னிட்டு உதகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...