வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த கோவை நீதிமன்றம்!

கோவையில் கடந்த 2021-ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அவரது வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த பெண், தனது கணவரை விட்டு பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்தார். முதல் கணவருக்கு பிறந்த 13 வயதுடைய மகளுடன், இரண்டாவது கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2021 ல் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அவரது வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தலைமையாசிரியர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிறுமியின் வளர்ப்பு தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...