கோவையில் மது வாங்குவதில் தகராறு - நண்பனை கத்தியால் குத்தியவர் கைது!

கோவை இடையர்பாளையம் மதுபான கடையில் எந்த மது வாங்கலாம் என்பதற்காக நடந்த தகராறில், நண்பர் நிக்சன் கழுத்தில் கத்தியால் தாக்கிய ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் மதுபான கடையில் சரண்ராஜ், நிக்சன், விஷ்ணு, ரகுமான் நான்கு பேரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்பொழுது எந்த மது வாங்குவது என்று நிக்சன் மற்றும் ரகுமான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பாருக்கு வெளியே வந்த ரகுமான் மற்றும் நிக்சன் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு ரகுமான் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்சன் தொண்டை பகுதியில் குத்தியுள்ளார். இதனால் நிக்சனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, நான்கு நண்பர்களில் ஒருவரான சரண்ராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எந்த பிராண்ட் மது வாங்கலாம் என்ற தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகுமான் மற்றும் நிக்சன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...