மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு குழு ஆய்வுக் கூட்டம் - தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்!

கோவையில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், அதிமுக எம்எல்ஏ.,க்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் மாதம் தோறும் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு சார்பில் நடைபெற்றுவருகிறது.



அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்துள்ளார்.



கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், அமுல்கந்தசாமி, செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேரும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள், பொதுமக்கள் குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தாமதமாக நடைபெற்று வரும் பணிகள் மற்றும் காரணங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...