எங்களையும் புடிச்சி உள்ளே போடுங்க ஏட்டய்யா..! - வால்பாறை காவல் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு

வால்பாறை காவல் நிலையத்திற்குள் நுழைந்த 8 காட்டு யானைகளை, போலீசார் சத்தமிட்டு விரட்டியதால் தேயிலை தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லையில் அமைந்து உள்ள மலுக்கைபாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நின்று அதிரப்பள்ளி பகுதிக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து இடையூறு செய்வது அடிக்கடி அரங்கேறிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் மலுக்கைபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த எட்டு காட்டு யானைகள் வால்பாறை சாலையில் நடந்து வந்துள்ளது.



அப்பொழுது காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் யானைகள் வரும்பொழுது எதிரே வாகனம் வந்ததால் காட்டு யானைகள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.



சிறிது நேரம் காவல் நிலையத்தில் சுற்றிய யானைக் கூட்டத்தை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சத்தம் போட்டதால், தேயிலைத்தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.



காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் திடீரென யானைக் கூட்டம் நுழைந்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடிக்கடி வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...