எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் விவகாரம் - மார்ச்.10ம் தேதி சிபிஎம் எம்.பி.,க்கள் குழு திரிபுரா பயணம்!

தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடுவதற்காக, தமிழகத்தில் இருந்து சிபிஎம் எம்பி.,க்கள் திரிபுரா மாநிலத்திற்கு வரும் மார்ச் 10ம் தேதி செல்லவுள்ளனர். அகர்தலாவில் நடக்கும் சிபிஎம் எம்பி.,க்கள் கூட்டத்தில் கோவை எம்பி பி.ஆர்.நடராஜனும் பங்கேற்க உள்ளார்.


வட கிழக்கு மாநிலமான திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு எதிர்கட்சி நிர்வாகிகள் மீதும் அவர்களின் வீடுகள் மீதும் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, CPI(M)அலுவலகங்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது.

வீடு மற்றும் உடமைகள் மீது தீவைப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 668 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தனக்கு மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்ற பாசிச மனப்பான்மையில் பாஜக இத்தகைய ஜனநாயக விரோத சம்பவங்களை அரங்கேற்றி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், திரிபுராவில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரிபுரா மாநிலத்திற்கு வரும் மார்ச் 10, 11 ஆகிய இரு நாட்கள் செல்லவுள்ளனர்.

அத்தோடு, சிபிஎம் எம்.பி.,க்கள் கூட்டமும் அகர்தலாவில் நடக்க உள்ளது.



இதில் கலந்து கொள்வதற்காக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் P.R.நடராஜனும் திரிபுரா செல்ல உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...