தாராபுரத்தில் மக்காச்சோளம் ஏலம் - ரூ.12.5 லட்சத்திற்கு விற்பனை!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 12.50 லட்சத்திற்கு மக்காச்சோளம் விற்பனையானது. அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2ஆயிரத்து 271-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து 244-க்கும் மக்காச்சோளம் விலைபோனது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த திருப்பூர் விற்பனைக்குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதற்காக திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 55 ஆயிரத்து 821 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.



இதில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2ஆயிரத்து 271-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து 244-க்கும் மக்காச்சோளம் விலைபோனது.

அதன்படி, விவசாயிகள் கொண்டு வந்திருந்த மக்காச்சோளம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த மறைமுக ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...