கோவையில் டிராவல்ஸ் ஊழியர் மீது தாக்குதல் - போதை இளைஞர் கைது

கோவை பீளமேடு பகுதியில் குடிபோதையிலிருந்ததால் பேருந்துக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த தனியார் டிராவல்ஸ் ஊழியர் கீர்த்தனா என்பவரை தகாத வார்த்தையில் பேசி, தாக்கிய வெங்கடேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பீளமேடு பகுதியில் டிக்கெட் கொடுக்க மறுத்த பெண் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு புதுரை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவர் காந்திபுரம் முதலாவது வீதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியிலிருந்த போது சென்னைக்கு செல்வதற்கு டிக்கெட் கேட்டு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையிலிருந்ததால் கீர்த்தனா டிக்கெட் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி கீர்த்தனாவின் கன்னத்தில் தாக்கினார்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து கீர்த்தனா கொடுத்த புகாரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் இளம் பெண்ணை தாக்கியது சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(44) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...