கோவை மாநகராட்சியில் வரும் 11,12-ல் வரிவசூல் முகாம் - ஆணையர் பிரதாப் அறிவிப்பு!

கோவை மாநகராட்சியின் 5, 6, 7, 8, 55, 56, 57, 35, 75, 39, 36, 38, 89, 100, 15, 19, 25, 28, 44, 32, 62, 63, ஆகிய வார்டுகளில் வரும் 11, 12 தேதிகளில் நடைபெறவுள்ள வரிவசூல் முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் வரி பாக்கியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் மார்ச் 11 மற்று 12ஆம் தேதிகளில் வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சியில்‌ நடப்பு 2022-23ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டு இறுதியான 31.03.2023 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ உள்ளிட்ட அனைத்து நிலுவைகளையும்‌ செலுத்த பொதுமக்களின்‌ வசதி கருதி மாநகராட்சியின்‌ பல்வேறு வார்டுகளில்‌ 11.03.2023‌ மற்றும்‌ 12.03.2023ஆம்‌ தேதிகளில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடத்தப்பட உள்ளன.

இதில்‌ கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.5ல்‌ வலியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.6ல்‌ வீரியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.7 மற்றும்‌ 8ல்‌ காளப்பட்டி நேரு நகா்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌ 55ல்‌ எஸ்‌.ஐ.எச்.எஸ்‌.காலனி மாநகராட்சி பள்ளியிலும்‌, வார்டு எண்‌.56-ல்‌ சூர்யா நகா்‌ - ரயில்வே கேட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌. 57ல்‌ ஒண்டிபுதூர்‌ நெசவாளர்‌ காலனி பகுதியிலும்‌ வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

அதேபோல் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.35ல்‌ இடையர்பாளையம்‌ - கற்பக விநாயகா கோவில்‌ வளாகம்‌ மற்றும்‌ வார்டு எண்‌.75ல்‌ சீரநாயக்கன்பாளையம்‌ - அங்கன்வாடி மையத்திலும்‌ நடைபெறுகிறது.

மேலும்‌, வார்டு எண் 39ல்‌ சுண்டப்பாளையம்‌ பெருமாள்‌ கோவில்‌ வளாகத்தில்‌ 11.03.2023 சனிக்கிழமை அன்றும்‌ மற்றும்‌ வார்டு எண்‌.36ல்‌ நியூ தில்லை நகா்‌ 5வது கிராஸ்‌ வீதியிலுள்ள நியாய விலை‌ கடையிலும்‌, வார்டு 38ல்‌ பொம்மானாம்‌பாளையம்‌ மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌ 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்றும்‌ நடைபெறவுள்ளது.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.89ல்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகம்‌ மற்றும்‌ வார்டு எண்‌.100-ல்‌ பி.என்‌.டி.காலனியிலும்‌ நடைபெறவுள்ளது.

வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15 சுப்ரமணியம் பாளையம்‌ - வார்டு அலுவலகம்‌ அருகிலும்‌, வார்டு எண்‌ 19ல்‌ மணியகாரம்பாளையம் ‌- அம்மா உணவகம்‌, வா௱டூ எண்‌.25ல்‌ காந்தி மாநகர்‌ - அரசு மேல்‌நிலை பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 28ல்‌ காமதேனு நகர்‌ - வாடு அலுவலகத்திலும்‌, வார்டு எண்‌.44ல்‌ நல்லாம்பாளையம்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளியிலும்‌ நடைபெறவுள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.32ல்‌ சிறுவர் பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு எண்‌ 62 சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.63ல்‌ ஒலம்பஸ்‌ - 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌, வார்டு எண்‌ 80ல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 84ல்‌ ஜி.எம்‌. நகரில்‌ உள்ள தாகத்‌ இஸ்லாம்‌ பள்ளியிலும்‌ நடைபெற உள்ளது.

மேலும்‌, 31.03.2023 வரை சனி மற்றும்‌ ஞாயிற்று கிழமைகளில்‌ அரசு விடுமுறை நாட்கள்‌ நீங்கலாக ஏனைய நாட்களில்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ வழக்கம்போல்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை செயல்படும்‌.

எனவே, பொதுமக்கள்‌ இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...