கோவை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு - 7 பேர் சஸ்பெண்ட், 6 பேர் பணியிடமாற்றம்!

கோவை பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின்பால் உற்பத்தி நிறுவனத்தில் 38 லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது தணிக்கையில் தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேரை தற்காலிக பணிநீக்கமும், 6 பேரை இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை பேரூர் பச்சாபாளையத்தில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தில், நாளொன்றுக்கு, 2 லட்சத்து, 17 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக பால்கோவா, பால்பேடா, பால் அல்வா, கேரட் மைசூர்பா உள்ளிட்ட 22 வகையான பால் உபபொருட்கள் மற்றும் இனிப்புகள் தயாரித்து, விற்கப்படுகிறது.

இவற்றை விற்பனை செய்ததில், ரூ.38 லட்சம் வரை முறைகேடு மற்றும் கையாடல் நடந்தது கண்டறியப்பட்டது. இதில், தொடர்புடைய மூன்று ஊழியர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக பல்வேறு கட்ட விசாரணை நடத்தியபின், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றபோது கையாடல் மற்றும் முறைகேடு செய்த தொகையை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் அறிய தணிக்கையில் ஈடுபட்டபோது முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தது. மன்னிக்கக்கூடிய குற்றம் புரிந்த, 6 பேர் தொலைதூர நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பல லட்சம் ரூபாய் முறை கேடு மற்றும் கையாடல் செய்த மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருவர் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால், அவரது பணப்பலன்களில் இருந்து, முறைகேடு செய்த தொகையை பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...