கோவையில் நடந்து சென்றவரை பாட்டிலால் குத்தி வழிப்பறி - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

கோவை லங்கா கார்னர் பகுதியில் நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி மனோகரன் என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, குவாட்டர் பாட்டிலால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி கூலித் தொழிலாளி மனோகரன் (வயது37) என்பவர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த கும்பல் குவாட்டர் பாட்டிலை உடைத்து மனோகரனை நெஞ்சுப் பகுதியில் குத்தியதால், அவர் வலியில் அலறித் துடித்தார். காயமடைந்த மனோகரன், அவரின் நண்பரிடமிருந்த 2 செல்ஃபொன்களை பறித்துக்கொண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

காயமடைந்த மனோகரன், கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...