பில்லூர் 3ம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார் கோவை ஆட்சியர்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோவை மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய ரூ.740 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: பில்லூர் மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோவை மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய ரூ. 740 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் (பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட பில்லூர் III பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செந்தில் குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜி, நிர்வாக பொறியாளர் செல்லமுத்து, உதவி நிர்வாக பொறியாளர்கள் செந்தில்குமார், பட்டன், ராதா ஆகியோர் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன், குறிச்சி குனியமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளும் 7 பேரூராட்சிகளும், ஒரு ஊராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவு செய்யப்பட்டது. இவ்வாறு விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3ம் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு 740 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இத்திட்டப் பணிகளானது நீரேற்று நிலையம் குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பிரித்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்படி மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இயல்பு நீருந்து குழாய், சுத்த நீருந்து குழாய் மற்றும் கிளை பிரதான நீருந்து குழாய் என மொத்தம் 90.76 கி.மீ நீளத்திற்கு அமைக்க உத்தேசித்து, 41.கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிவுற்றுள்ளது எனவும், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், குழாய்கள் அமைக்கும் பணிகள் 47% சதவிகிதம் முடிவுற்றுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுரங்கபாதை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ளது. குழாய்கள் அமைக்கவும், பிரதான தரைமட்ட தொட்டி அமைக்கவும் 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது எனவும் இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகவும், 121 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது எனவும் நில கையெடுப்பு பணிகள் அனைத்தும் முடித்து மே மாதத்திற்குள் இத்திட்டம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...