முதலுதவி செய்வது எப்படி..? - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்த கோவை போலீசார்!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவல்துறை சார்பில் வலிப்பு வந்தால் எப்படி காப்பாற்றுவது, கையில் அடிபட்டால் எப்படி காப்பாற்றுவது, அடிபட்டவரை எப்படி தூக்குவது என ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பாக முதலுதவி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பாக முதலுதவி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



இதில் வலிப்பு வந்தால் எப்படி காப்பாற்றுவது, கையில் அடிபட்டால் எப்படி காப்பாற்றுவது, அடிபட்டவரை எப்படி தூக்குவது எனப் பயிற்சி அளிக்கப்பட்டது.



அப்போது கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாநகரில் 4,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்தில் சிக்குபவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது என்பது குறித்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. இன்று 200 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் அவருக்கு எப்படி உடனடியாக முதலுதவி கொடுக்க வேண்டும், எப்படி மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என பல்வேறு வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மூலமாக முதலுதவி கொடுப்பதும், உயிர் இழப்பை தடுக்கவும், ரத்தக்கசிவை நிறுத்தவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு மாதம் முழுவதும் நான்காயிரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது.

கோவையை பொருத்தவரை விபத்து பகுதிகள் என 47 ஹாட்ஸ்பாட் அறியப்பட்டுள்ளது. ஒரு விபத்து நடந்தால் பொதுமக்கள் தாமாகவே ஆம்புலன்சை அழைக்க வேண்டும். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,வழக்கு வந்துவிடுமோ என அச்சம் தற்போது குறைந்து வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...