கோவையில் இருந்து வடக்கு கோவாவுக்கு புதிதாக விமான சேவை - சுற்றுலா பயணிகள் வரவேற்பு

முக்கிய சுற்றுலா தலமான வடக்கு கோவாவிற்கு கோவையில் இருந்து விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தில் 4 நாட்கள் வடக்கு கோவாவிற்கு விமான சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து வடக்கு கோவாவிற்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

கோவாவில் சமீபத்தில் 2வது சர்வதேச விமான நிலையம் வடக்கு கோவாவில் திறக்கப்பட்டது. வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் ரூ.2,870 கோடி மதிப்பீட்டில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வடக்கு கோவாவையே சுற்றுலா தலமாக தேர்வு செய்வதால் அப்பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் கோவையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது வாரத்தில் 4 நாட்கள் என ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது.

அதன்படி விமான சேவையானது திங்கள் கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு சென்று சேரும்.

இதேபோல், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த விமான சேவைக்கு சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...