குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து கோவையில் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு!

கோவையில் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவது குறித்து சமூக நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க, விழிப்புணர்வு நடவடிக்கையை சமூகநலத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 வயது என திருமண வயதினை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், பெற்றோரின் அவசரத்தாலும், பல்வேறு காரணங்களாலும் 18 வயதுக்கு முன்னதாகவே சிறுமிகளுக்கு திருமணம் நடத்தப்படும் நிகழ்வுகள் தற்போதும் தொடர்கின்றன.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் கணக்கின்படி, குழந்தை திருமணங்கள் தொடர்பாக கோவையில் கடந்த 2019-ம் ஆண்டு 58 நிகழ்வுகள், 2020-ம் ஆண்டு 30 நிகழ்வுகள், 2021-ம் ஆண்டு 99 நிகழ்வுகள், 2022-ம் ஆண்டு 109 நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திருமணங்கள் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன. நடப்பாண்டு ஜனவரி மாதம் 6 நிகழ்வுகள், பிப்ரவரி மாதம் 17 நிகழ்வுகள் நடந்துள்ளன.

ஜனவரி மாதம் 3 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 3 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் 10 திருமணங்கள் நடந்துள்ளன. 7 திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும் போது, பெற்றோர் அனுமதியுடன் குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு மதம், சாதி, வறுமை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்வதும் உண்டு. இவற்றை தடுக்க இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, குழந்தை திருமணங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்யும் போது, அதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் (பொறுப்பு) ஆண்டாள் கூறியதாவது, குழந்தை திருமணங்களை தடுக்க தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். குழந்தை திருமணங்கள் செய்பவர்கள், அதை ஏற்பாடு செய்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கிறோம்.

சிறுமியின் கணவர், பெற்றோர் என இதில் தொடர்புடையவர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளில் போலீசாரால் வழக்கு பதியப்படுகிறது. மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள, ஒவ்வொரு கிராமத்திலும் கிராம கண்காணிப்புக் குழு ஏற்படுத்தியுள்ளோம்.

அதில், அந்த கிராமத்தின் விஏஓ, மகளிர் திட்ட அலுவலர், சமூ கநலத்துறையினர், காவல் துறையினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...