கோவையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - திருமணம் ஆகாததால் விரக்தியில் விபரீத முடிவு!

கோவை ரத்தினபுரி அருகேயுள்ள வ.உ.சி வீதியை சேர்ந்த அசோக்குமார் (28) திருமணம் ஆகாததால் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் ரத்தினபுரி அருகே திருமணம் ஆகாததால் விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தினபுரி அருகே உள்ள வ.உ.சி வீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (28). கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற அசோக்குமார், விரக்தியில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீசார், விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...