சுந்தராபுரம் அருகே நடுரோட்டில் தோசை மாஸ்டரிடம் கஞ்சா கேட்டு மர்ம நபர்கள் தகராறு - பரபரப்பு!

சுந்தராபுரம் அடுத்த செங்கப்பகோனார் வீதியில் நடந்து சென்ற தோசை மாஸ்டர் முத்துப்பாண்டியிடம் மர்ம நபர்கள் மூவர், கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டு, செல்போனை பறித்து சென்ற நிலையில் புகாரின் பேரில் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே நடுரோட்டில் தோசை மாஸ்டரிடம் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(23). இவர் சுந்தராபுரம் அருகே தங்கி ஓட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பணிக்கு செல்வதற்காக சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது அவரை வழிமறித்த மூன்று நபர்கள், இவரிடம் கஞ்சா கேட்டு கலாட்டாவில் ஈடுபட்டு அடாவடி செய்திருக்கின்றனர். தோசை மாஸ்டரான முத்துப்பாண்டி, தன்னிடம் கஞ்சா இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மூவரும் முத்துபாண்டியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து முத்துப்பாண்டி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற மூன்று நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சரவணன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சாலையில் நடந்து சென்றவரிடம் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...