கோவையில் இருவேறு இடங்களில் சூதாட்டம் ஆடிய 10 பேர் கைது - ரூ.2,600 பணம் பறிமுதல்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருவேறு இடங்களில் சூதாட்டம் ஆடிய 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2,600 பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் சூதாட்டம் ஆடுவது சட்டப்படி குற்றம். ரம்மி உள்ளிட்ட சீட்டாட்டம் ஆடுவதனால் நடுத்தர மற்றும் ஏழை எளியோர் தங்கள் சொத்துகளை இழந்து விடுகின்றனர்.

அந்த வகையில் சூதாட்டம் ஆடுபவர்களை தடுத்து வரும் போலீசாருக்கு, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிலர் சூதாட்டம் ஆடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முத்தண்ணன் குளம் பகுதியில் செந்தில் குமார், சவுகத் அலி, ஆறுமுகம், திருமுருகன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் சூதாட்டம் ஆடிக் கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து, ரூ.1,300 பணம் மட்டும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கிருஷ்ணாபதிகுளம் பகுதியில் சீட்டாடிக் கொண்டிருந்த ஜெகதீஷ், சரவணகுமார், மாணிக்கம், பாட்ஷா, கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர்களிடம் இருந்து 1300 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதானவர்களில் பெரும்பாலானோர் கடைநிலையில் பணியாற்றும் கூலி தொழிலாளிகள். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பத்து பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...