ஆன்லைன் ரம்மி விவகாரம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் நூதனப் போராட்டம் அறிவிப்பு

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களின் சாம்பலை தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பும் போராட்டம், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 16ம் தேதி நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி வரும் 16ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:



ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டை தடை செய்யும் நோக்குடன் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் அந்த மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார். தடை சட்டம் நிறைவேறாததால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் விளையாட்டில் ஏமாந்த தமிழ் மக்கள் தற்கொலை செய்து வருகிறார்கள்.

இதுவரை 42 பேர் ஆன்லைன் ரம்மி விளையாடி தற்கொலை கொண்டிருக்கின்றார்கள். தமிழக மக்களை உயிர்களை காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் ஆன்லைன் சூதாட்ட முதலாளிகளுடன் ஆளுநர் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு மக்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படாத தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த தமிழர்களின் சாம்பல்களை தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடத்துகிறோம்.

அதன்படி வரும் 16/03/ 2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...