பயம், பதட்டமின்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்..! - கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாழ்த்து

கோவை உட்பட தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் உறுப்பினர் வானதி சீனிவாசன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது, மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான காலகட்டம். இந்த பொதுத் தேர்வு, தனிப்பட்ட மாணவரின் எதிர்கால மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் கூட. இது நவீன தொழில்நுட்ப யுகம்.

ஒவ்வொரு மாணவரிடமும் புதைந்து கிடக்கும் திறனுக்கேற்ப படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, பயம், பதட்டமின்றி தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...