கோவை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி! - பரபரப்பு

ஆட்டோ ஓட்டக்கூடாது என்று சிலர் தொடர்ந்து மிரட்டி வருவதாக ஒரு பெண் உட்பட 3 ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் மனுக்களை அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளை காவல்துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் வரும்போது, அலுவலகம் முன்பு ஒரு பெண் உட்பட மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.



அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றி, அந்த மண்ணெண்ணெய் கேன்களை பறிமுதல் செய்து, அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், அவர்கள் துடியலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் ஆன்ந்த்குமார், ரகு, அகமது, என்பதும் அப்பெண் ரகுவின் தாயார் லட்சுமி என்பதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து பேசிய அவர்களது குடும்பத்தினர், பல ஆண்டுகளாக அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அங்குள்ளவர்கள் இவர்களை ஆட்டோ ஓட்டக்கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தனர்.

அந்த ஆட்டோ ஸ்டாண்ட் பாஜக கட்சியை சேர்ந்தது எனவும், இவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களையும் பாஜகவில் இணையும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டினர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து அதன்மூலம் ஆர்டிஓ அங்கு விசாரணை செய்தனர்.



இதையடுத்து அதிகப்படியான மிரட்டல்கள் வருவதாக தெரிவித்தனர். வாகன கடன், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...