பொள்ளாச்சி அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் - தந்தையின் நண்பர் கைது

பொள்ளாச்சி அருகே நண்பரின் மகளான 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தாலுக்கா காவல் நிலைய போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கேரளா அருகே பதுங்கி இருந்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த சிறுமியை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை அந்த நபர் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...