கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற ஓட்டுநர் போக்சோவில் கைது!

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவியை ராமேஸ்வரத்திற்கு கடத்திச் சென்ற சாத்தூரை சேர்ந்த ஓட்டுனர் ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற ஓட்டுனரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17வயது மாணவி கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் கல்லூரிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் பெற்றோர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் மாணவியின் செல்போன் மூலம் அவர் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் சாத்தூரை சேர்ந்த ஓட்டுநர் ஞான பிரகாசம் (27) என்பவரோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஞானப்பிரகாசம், செல்போன் சிக்னலை சோதனை மேற்கொண்டதில் ராமேஸ்வரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.



இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் ராமேஸ்வரம் சென்று ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...