கோவையில் கிரிக்கெட் போட்டி நடுவருக்கான இலவச பயிற்சி - நேரடியாக விண்ணப்பிக்கலாம்!

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர்கள் மற்றும் 'ஸ்கோரர்களுக்கான' இலவச பயிற்சி முகாம் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நேரில் சென்று மார்ச் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கிரிக்கெட் 'ஸ்கோரர்' மற்றும் நடுவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த முகாமில் கிரிக்கெட் ஸ்கோரர்கள் மற்றும் நடுவர்களுக்கான விதிமுறைகள், செயல்முறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு வரும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் மகாலிங்கத்தை 97877 40390 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...